Monthly Archives: January 2016

mm-avoid-plastic-campaign-04

போகி தின வாழ்த்துக்கள்

‘பழையன கழித்தலும், புதியன புகுதலும்’ என்ற வாக்கியத்திற்கு இணங்க மன்னையின் மைந்தர்கள் குழு நெகிழியை கழிக்கும் வண்ணம் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் துண்டறிக்கைகளை வடிவமைத்து மன்னார்குடி பெரிய கோவில், பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தையின் முன் இன்று (14/01/2016) காலையில் மக்களுக்கு வழங்கினர். இனி மக்கள் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன்.

இதில் மன்னையின் மைந்தர்கள் விக்னேஷ், பிரவின், விஜய் சாய், சச்சின், மணி, செந்தில் குமரன், பரத், அஜித் குமார் மற்றும் ராம் பங்கு கொண்டு சிறப்பாக செயல்படுத்தினர்.