நான்காவது தூணான பெரும்பாலாக முன்னணி ஊடகங்கள் ஊனமான நிலையில் உள்ளதால், சமூக ஊடகங்கள் நான்காவது தூணாக உருவெடுத்தது மகிழ்ச்சியாகவே உள்ளது.
அந்த சமூக ஊடகத்தின் வழியாக பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒடுக்குபவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பது தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று (11-01-2017) மாலை 4.00 மணி அளவில் மன்னார்குடி தேரடி திடலில் இருந்து நகராட்சி வரை தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், நாட்டு மாடு வளர்ப்பு, இயற்கை விவசாயம், ஏறுதழுவல் இவை அனைத்தையும் மீட்டெடுக்கும் வகையில் மண்ணை காக்கும் மன்னார்குடி வட்டார நண்பர்களால் ஒன்றிணைக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் நம் அமைப்பினர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் பேரணிக்கு வருகை தந்த அனைத்து பொது மக்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
















































