Monthly Archives: February 2020

சோழேஸ்வரர் கோயில் தூய்மைப்படுத்தும் பணி

இடம்: மன்னார்குடி
நாள்: 16 பிப்ரவரி 2020

மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில் களப்பணியாக பட்டக்காரத்தெருவில் உள்ள சோழேஸ்வரர் கோயில் (சிவன் கோயில்) உள்ளே இருந்த தேவையில்லாத செடிகொடிகளை அகற்றியும், புயலின் பொழுது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியும் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பணிகள் நிறைவு பெற்றது.

இத்துடன் கோயிலை சுற்றி சிறு சிறு மரக்கன்றுகளும் நட்டுவைத்து இவ்வார கலந்தாய்வையும் மன்னையின் மைந்தர்கள் அங்கே ஒருங்கிணைத்தார்கள். அதில் தற்சார்பு பொருளாதாரம் பற்றிய விவாதம் கருப்பொருளாக கொண்டு பலரும் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தார்கள்.

களப்பணியில் கலந்து கொண்டவர்கள்:
நிரஞ்சன், வசந்தன், பாலாஜி, யோகேஷ்வரன், ஜெயபிரகாஷ், ரஞ்சித், ராம்,
அருண்பதி, ராசசேகர், ஓம், ராசசபரி, கார்த்தி, நந்தகுமார், ஜவகர், G.T. மகேஷ், அஷ்வத், மணிகண்டன், 3 சிறுவர்கள், மற்றும் தெருவாசிகள்

திறவுகோல் 2051 மாசி மின்னிதழ்

திறவுகோல் 2051 மாசி மாத மின்னிதழ்

திறவுகோல் 2051 மாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

ஒளிரும் ஆசிரியர் (பகுதி 7), சாலையோர மனிதர்கள், நாஞ்சில் மரபு நடை, கடன் அன்பை வளர்க்கும் போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்