இவ்வார பசுமை விகடனில் (25-12-2015) நம் மன்னையின் மைந்தர்களின் நம்மாழ்வார் பூங்கா திறப்பை பற்றிய கட்டுரை …. இதோ உங்கள் பார்வைக்காக….



இவ்வார பசுமை விகடனில் (25-12-2015) நம் மன்னையின் மைந்தர்களின் நம்மாழ்வார் பூங்கா திறப்பை பற்றிய கட்டுரை …. இதோ உங்கள் பார்வைக்காக….



இயற்கையை நாம் பாதுக்காத போது இயற்கை நம்மை பாதுகாப்பதில்லை. கடந்த 100 ஆண்டுகளாய் சந்தித்திராத கோர நிகழ்வை சென்னை, கடலூரில் பார்க்க முடிந்தது. வார்த்தைகளை கொண்டு விவரிக்க முடியாத மக்களின் துயரை துடைக்க பலரும் தங்கள் பங்களிப்பை கொடுத்தனர்.
அந்த வகையில் மன்னையின் மைந்தர்கள் குழு மற்றும் பலரின் ஒத்துழைப்புடன் உணவு பொருள், பாய், மருந்து பொருள் என சேகரித்து பாதிப்படைந்த கடலூர் மக்களிடம் இரண்டு கட்டமாக கொண்டு சேர்த்தனர்.
குறிப்பாக மருத்துவர் பாரதிசெல்வன் அவர்கள் மருத்துவ முகாம் நடத்தி மேலும் கள பணியை சிறப்படைய செய்தார்.
உதவி செய்த அனைத்து நல்லுலங்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
மன்னையின் மைந்தர்கள் உறுப்பினர்கள், மன்னார்குடி பேருந்து நிலையம், உழவர் சந்தை, கடை தெரு என அனைத்து இடங்களிலும் நேரம் பாராது உழைத்து கொண்டிருந்த வேளையில் மேலும் வலு சேர்க்கும் வண்ணம் யாரும் எதிர்பாராத வகையில் மூர்த்தி அண்ணன் அவர்கள் சிங்கப்பூரில் இருந்து இந்நிகழ்ச்சிக்காக நேரில் வந்து கருத்தரங்கம் முடியும் வரை அனைவருடன் இணைந்து பணியாற்றி சென்றது எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சி ஏற்பட்டிற்காக நம் உறுப்பினர்கள் அயராது செயல்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு….
எதும் அவ்வளவு எளிதில் நடப்பதில்லை. குறிப்பாக நம்மை போன்ற எளியவர்கள் செய்து முடிக்க நினைக்கும் செயல்கள். அதுபோல் தான் நாம் இம்மாதம் (திசம்பர் 5ம் தேதி) மன்னார்குடி தேசிய மேல்நிலை பள்ளியில் நடத்தி முடித்த பூமியை காப்போம் கருத்தரங்கமும்.
மன்னையின் மைந்தர்கள் மற்றும் நல்லுள்ளங்களின் தொடர்ச்சியான பங்களிப்பால் பல இடர்பாடுகளை தாண்டி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. கலந்து கொண்ட விருந்தினர்கள், மற்றும் வருகை தந்த அனைவருக்கும் மன்னையின் மைந்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.