Category Archives: திட்டங்கள்

கஜா புயல் பாதிப்பும், பங்களிப்பும்

நவம்பர் 16, 2018 ஆம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாக வீசிய காற்றுடன் கூடிய மழையாமல் அந்த பகுதியில் இருந்த பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் விழுந்தும், ஆடு மாடுகள் இறந்ததாலும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடினர்.

தமிழக அரசு சார்பிலும் போதுமான உதவிகள் மாதங்கள் கடந்து மக்களை சென்று அடையவில்லை.

சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு விட்டது மற்றும் மின்சாரமும் பல இடங்களில் ஒரு வாரம், இரண்டு வாரங்கள் ஆகியும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

தனி நபர்கள், சிறு சிறு குழுக்கள் என்று பலரும் கைகோர்த்து களத்தில் மக்களுக்கு இரவு பகல் பாராமல் உதவினார்கள். அந்த வகையில் மன்னையின் மைந்தர்கள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் தன்னார்வலர்கள் உதவியுடன் செய்த செயற்பாடுகள் கீழ் உள்ள  காணொலியில் காணவும்.

gajaa-2049-reportமேலும் கஜா புயல் பாதிப்பும் பங்களிப்பும் என்ற ஆவணத்தை இங்கு சொடுக்கி பார்க்கவும். இந்த மின்னூலில் நமது அமைப்பின் செயல்பாடுகளும், கைக்கொடுத்த தன்னார்வலர்கள் மற்றும் வரவு, செலவு கணக்குகளை தனி கோப்பாக பகிர்கிறோம்.

உடன் பயணித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

மன்னையின் மைந்தர்கள்
மண்ணின் மாற்றத்தை நோக்கி
தொடர்புக்கு +91 8220567322

அரிச்சபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பணி

மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் 09-11-2017 கள ஆய்வில் ஈடுபட்டார்கள். அதில் மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு பிரச்சனைகளை கண்டறிந்து இறுதியாக அரிச்சபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிகளை தொடங்கினார்கள்.

பள்ளியின் வகுப்பறை தரைத்தளங்கள் மற்றும் முகப்பு சுவர் உடைந்தும், தண்ணீர் தொட்டி மாற்ற வேண்டிய சூழல், மாணாக்கர்கள் கைகழுவும், குடிநீர் வரும் குழாய்கள் பழுதடைந்தும், கழிவறை கூரை இடிந்து விழும் நிலையிலும் இருந்ததும். அதனை சில வாரங்களுக்கு முன் முதற்கட்ட பணியாக எடுத்துக்கொண்டு, அனைத்தும் முடித்து தரப்பட்டது மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ…

PRM பூங்கா பராமரிப்பு பணி

கடந்த ஞாயிறு (28-05-2017) அன்று மன்னையின் மைந்தர்கள் குழுவின் சார்பில் PRM பூங்கா பராமரிப்பு நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பங்களிப்பு வழங்கிய ஜீவா, கலைவாணன், பிரவின், பிரசன்னா, பாரி, விக்னேசு, அஜித். ராம், ரஞ்சித்,
வினோத், பாலாஜி, கமல், நிரஞ்சன், ஓம், ஆகாஷ், மோகன், கார்த்தி(புள்ளவராயன்),
ஜவகர், மற்றும் பரத் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

களத்தின் புகைப்படங்களை கீழே பதிந்துள்ளோம்.

நம்மாழ்வார் ஏரி – பழைய சுவர்களில் வெள்ளையடிக்கும் பணி

விடுமுறை, ஞாயிறு என வந்துவிட்டால் படிக்கும் மாணவர்கள் என்றால் விளையாட்டு, அலுவலகங்களில் வேலை புரிபவர்கள் என்றால் ஓய்வு அல்லது தொலைக்காட்சி என இருக்கும் சமூகத்தில் மன்னையின் மைந்தர்கள் சமூக அக்கறையுடன் கிடைக்கும் நேரங்கள் அனைத்தையும் செவ்வனே எப்படி பயன்படுத்துவது என்று திட்டமிட்டு இந்த வார இறுதியில் செய்த பணிதான் மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியின் (சீயார் தோப்பு) பகுதியில் இருக்கும் நீர்த்தேக்க தொட்டி பழைய சுவர்கள், மற்றும் அதில் இருக்கும் பாழடைந்த அறையின் சுவர்களில் வெள்ளையடித்து தூய்மையாக்கிய செயல்.

காலை 7 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2.30 மணி வரை களப்பணியாற்றி அங்கு சுற்றியுள்ள மக்கள் பலர் சிந்திக்கும் வண்ணம் செய்து முடித்தனர்.

களப்பணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம். பின்வரும் தோழர்கள் களப்பணியை சிறப்பாக செய்து முடித்தவர்கள்.

குரு, தங்க கலைவாணன், கமல், விக்னேஷ், ஆகாஷ், பிரசன்னா, வினோத், புஸ்பராஜ், பிரவீன், சாய் விஜய், செந்தில் குமரன், செந்தில் பக்கிரி, இலியாஸ், ஜீவானந்தம், கைலாசம் ஐயா, மருத்துவர் பாரதிசெல்வன் ஐயா, தமிழ்மணி அண்ணாவின் அப்பா, ஆகாஷ் அம்மா அப்பா, மோகன், லட்சுமி.

அதன் புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு.

நிலத்தடி நீர் அதிகரிக்க வேண்டி செய்த பணி – நம்மாழ்வார் ஏரி

ஒவ்வொரு பணியாக முடித்து, பல கருத்துக்கள், அறிவுரைகளை கருத்தில் கொண்டு மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியில் நிலத்தடி நீரின் மட்டத்தை அதிகரிக்கும் வண்ணம் களப்பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு முடித்துள்ளார்கள்.

நிதியுதவி வழங்கிய மற்றும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் மன்னையின் மைந்தர்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.

நம் களப்பணியாளர்கள் செயலை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இதோ …..

மேலும் இசையமைப்பாளர் வசந்த் அவர்கள் தன் பிள்ளையின் பிறந்த நாளையொட்டி அங்கு மரக்கன்றுகளை நட்டுவைத்ததும் இல்லாமல் அதற்கான கூண்டையும் அமைத்து கொடுத்தார்.

நம்மாழ்வார் ஏரி குழாய் பதிக்கும் பணி

ஐந்தாம் கட்ட பணியாக திட்டமிட்டு திரட்டிய நிதியை கொண்டு கடந்த வாரத்தில் குழாய் பதிக்கும் பணி ஆரம்பித்தாலும், இடையிடையே மழையின் குறுக்கீடும் இருந்தது, ஆனாலும் இடைவிடாது இரவு பகல் என பாராமல் களப்பணியாளர்கள் நம்மாழ்வார் ஏரியில் குழாய் பதிக்கும் பணியை வெற்றிகரமாக செய்து காட்டினர்.

இதன் மூலம் அருகில் உள்ள சியான் குளத்திற்கு, நம்மாழ்வார் ஏரிக்கும்  இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. நிதி உதவி வழங்கிய உறுப்பினர்கள் மற்றும் வெளியில் இருந்து உதவி நல்லுள்ளங்கள், களப்பணியாளர்களுக்கு மன்னையின் மைந்தர்கள் குழுவின் சார்பில் நன்றி உரித்தாக்குகிறோம்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு கீழே பார்வைக்கவும்.

நம்மாழ்வார் ஏரி பணியின் காணொளி

நமது மன்னையின் மைந்தர்கள் அமைப்பால் கட்டமைக்கப்படுகின்ற நம்மாழ்வார் ஏரியின் (சீயார் தோப்பு நீர்த்தேக்கம்) தொடக்கம் முதல் இன்று வரை  செயற்பாடுகளும் நமது அமைப்பின் நோக்கமும் எதிர்கால முன்னெடுப்புகளின் காணொளி தொகுப்பு.

களப்பணி, நிதி உதவி, கருத்து பங்களிப்பு என அனைத்திலும் துணை நின்ற மன்னையின் மைந்தர்கள் உறுப்பினர்கள், வெளியில் இருந்து சிறப்பு நிதியில் பங்கு கொண்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

காணொளி எடுத்து, மற்றும் பலரை சென்று அடையும் வகையில் ஒளிபரப்பிய ஜனனி தொலைக்காட்சி (மன்னார்குடி) நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.

மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தின் அருகில் கைப்பந்து விளையாட்டு

மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தின் அருகில் நீண்ட காலமாக இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றி அதனை சமநிலைப்படுத்தி  கொடுத்ததன் பயன் இன்று மாலை நேரங்களில் அங்கு உள்ள இளைஞர்கள் கை பந்து விளையாட்டு விளையாடி மகிழ்கிறார்கள்.

இது மன்னையின் மைந்தர்கள் குழுவிற்கான மற்றுமொரு வெற்றி என சிங்கப்பூரில் இருக்கும் நமது குழு உறுப்பினர் திரு.செல்வபூபதி அவர்கள் கூறினார்.

பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும், நல் உள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகள்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு (புகைப்பட உதவி திரு.ஜீவானந்தம் அவர்கள்)

volley-ball-game-mannargudi-railway-station-01 volley-ball-game-mannargudi-railway-station-02

ஜீ ஆர் தோப்பு பகுதியில் சீமை கருவேல மரம் அகற்ற சிறப்பு நிதி கொடுத்தவர்கள்

களப்பணியில் ஈடுபட்ட, நிதி உதவி, கருத்து வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை உரித்தாக்குகிறோம்.

மன்னையின் மைந்தர்கள் குழுவின் ஜி.ஆர். தோப்பு பகுதியின் முதற்கட்ட பணியான சீமை கருவேல மரம் அகற்ற சிறப்பு நிதி கொடுத்தவர்கள் பட்டியல்.

 பிரசன்னா  ரூ. 400
 ஜீவா  ரூ. 1000
 விக்னேசு  ரூ. 2000
 மனோ ரூ. 5000
 செந்தில் ரூ. 5000
 சுரேஷ் ரூ. 2000
 ஓம்பிரகாஷ் ரூ. 500
 ராசசேகரன் & விஜீ ரூ. 5000
 செல்வபூபதி ரூ. 10000
 உத்திராபதி ரூ. 1000
 அருண்ரவி ரூ. 1000
 குரு ரூ. 500
 ராஜேஷ் ரூ. 500
 ரஞ்சித் ரூ. 500
 முத்து முருகன் ரூ. 5000
 செந்தில் ரூ. 1000
 கரன் கார்த்தி ரூ. 1000
 ராஜ்குமார் ரூ. 1000
 ரமேசு ரூ. 1000
 அப்பு ரூ. 1000
 பாலாஜி ரூ. 500
 பிரபாகரன் ரூ. 1000
 ரஞ்சித் ரூ. 5000
 வினோத்குமார் ரூ. 1000
 சிவா ரூ. 5000
 மொத்தம் ரூ. 56900/-

ஜி. ஆர். தோப்பு சீமை கருவேல மரங்கள் அழிப்பு

G R Thoppu, மன்னார்குடி

40 ஆண்டுகளுக்கு முன் மன்னார்குடி பகுதிக்கு நீர் வழங்கும் இடமாக இருந்ததுதான் இந்த ஜி. ஆர். தோப்பு – கோபிரளயம் நீர்த்தேக்க பகுதி (மன்னார்குடி அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி பின்புறம்) நாளடைவில் அரசின் பராமரிப்பு இன்றி சில வாரங்களுக்கு முன் வரை சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புடன் காணப்பட்டது.

மன்னையின் மைந்தர்கள் குழு முதற்கட்ட பணியாக அங்கு இருந்த கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை முன்வைத்து செலவு, மற்றும் களப்பணியை முன் நிறுத்தினர்.

மன்னையின் மைந்தர்களின் தொடர் முயற்சியால் கடந்தால் 8 நாட்களாக சீமை கருவேல மரங்கள் அங்கு இருந்து அகற்றப்பட்டது. இதற்கு களப்பணியிலும், பணமாகவும், கருத்தளவிலும் உதவிய மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ.