ஐந்தாம் கட்ட பணியாக திட்டமிட்டு திரட்டிய நிதியை கொண்டு கடந்த வாரத்தில் குழாய் பதிக்கும் பணி ஆரம்பித்தாலும், இடையிடையே மழையின் குறுக்கீடும் இருந்தது, ஆனாலும் இடைவிடாது இரவு பகல் என பாராமல் களப்பணியாளர்கள் நம்மாழ்வார் ஏரியில் குழாய் பதிக்கும் பணியை வெற்றிகரமாக செய்து காட்டினர்.
இதன் மூலம் அருகில் உள்ள சியான் குளத்திற்கு, நம்மாழ்வார் ஏரிக்கும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. நிதி உதவி வழங்கிய உறுப்பினர்கள் மற்றும் வெளியில் இருந்து உதவி நல்லுள்ளங்கள், களப்பணியாளர்களுக்கு மன்னையின் மைந்தர்கள் குழுவின் சார்பில் நன்றி உரித்தாக்குகிறோம்.
அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு கீழே பார்வைக்கவும்.






































