Monthly Archives: June 2016

தொடர்வண்டி நிலைய கருவேல மரம் அகற்றல் மற்றும் சமநிலை படுத்துதல்

கடந்த வெள்ளிகிழமை (18-06-2016) அன்று நம் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் இருந்த கருவேல மரங்களை முழுமையாக அகற்றி சமநிலை படுத்தும் செயல் நம் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்கள் உதவியுடன் நடைபெற்றது.

மேலும் இனி கருவேல மரம் வளராமல் இருக்க அங்கு தொடர்ச்சியாக அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் தானி ஓட்டுனர் தோழர்கள் விளையாடுவதாக உறுதி அளித்தனர்.

அதனை தொடர்ந்த நம் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்கள் ஞாயிறு (20-06-2016) அன்று மட்டை பந்து விளையாட்டு விளையாடினார்கள்.

அதன் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.

மன்னையின் மைந்தர்கள் குழுவின் – உலக சுற்றுசூழல் தின செயல்கள்

தேர்தல் முடிந்தது, எங்களின் வேலையும் முடிந்தது என்று இல்லாமல் மீண்டும் கள பணியை தொடங்கிவிட்டனர் மன்னையின் மைந்தர்கள் குழு. இன்று (05/06/2016) உலக சுற்று சூழல் தினம் அதனை முன்னிட்டு மக்களுக்கு இந்த தினத்திற்கான காரணம் புரியும் வண்ணம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு சிறிய அளவில் திட்டமிட்டு சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

முதலாவதாக ஐயா மருத்துவர். பாரதிசெல்வன் அவர்களின் மருத்துவமனையில் நெகிழி பைகளை ஒழிப்பதன் சிறு தொடக்கமாக துணி பைகள் விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டு பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

மேலும் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தில் இருக்கும் கருவை மரங்களை முற்றிலும் அகற்றும் வண்ணம் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்கள் ஜீவா, விக்னேஷ், தங்க கலைவாணன், பிரசன்னா, அஜித், அப்பு மற்றும் அவர்களின் நண்பர்கள் என அனைவரின் உதவியுடன் பெரும்பாலும் அகற்றப்பட்டது.

புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக இங்கு பதிந்துள்ளோம்.