தேர்தல் முடிந்தது, எங்களின் வேலையும் முடிந்தது என்று இல்லாமல் மீண்டும் கள பணியை தொடங்கிவிட்டனர் மன்னையின் மைந்தர்கள் குழு. இன்று (05/06/2016) உலக சுற்று சூழல் தினம் அதனை முன்னிட்டு மக்களுக்கு இந்த தினத்திற்கான காரணம் புரியும் வண்ணம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு சிறிய அளவில் திட்டமிட்டு சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.
முதலாவதாக ஐயா மருத்துவர். பாரதிசெல்வன் அவர்களின் மருத்துவமனையில் நெகிழி பைகளை ஒழிப்பதன் சிறு தொடக்கமாக துணி பைகள் விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டு பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
மேலும் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தில் இருக்கும் கருவை மரங்களை முற்றிலும் அகற்றும் வண்ணம் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்கள் ஜீவா, விக்னேஷ், தங்க கலைவாணன், பிரசன்னா, அஜித், அப்பு மற்றும் அவர்களின் நண்பர்கள் என அனைவரின் உதவியுடன் பெரும்பாலும் அகற்றப்பட்டது.
புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக இங்கு பதிந்துள்ளோம்.




















