Monthly Archives: December 2016

மிதிவண்டி பயணம் – நீர்நிலைகளை பாதுகாக்க கோரி

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க கோரி மிதிவண்டி பயணம் – 2016 (தண்ணீருக்கான பொது மேடை) குழு சென்னை, கோவை, கன்னியாகுமரி போன்ற பெரு பெருநகரங்கள் வழியாக பல ஊர்களுக்கு மிதிவண்டி பயணம் மேற்கொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

மிதிவண்டி பயண குழுவில் பாரதி கண்ணன், இரஞ்சித் மற்றும் விக்னேஷ் மூவரும் இந்த தொடர் பயணத்தில் உள்ளார்கள். அவர்கள் 108வது நாளான நேற்று (09-12-2016) மாலை தஞ்சாவூர் வழியாக மன்னார்குடியில் மன்னையின் மைந்தர்கள் மேன்படுத்தி வரும் நம்மாழ்வார் ஏரியை வந்து அடைந்தனர்.

நம் குழு உறுப்பினர் அருண் ரவி அவர்களின் மூலம் அறிந்து கொண்டு, நம்மாழ்வார் ஏரியை வந்து பார்வையிட்டனர்.

அவர்களுடன் நம் குழு உறுப்பினர்களும் அவர்களின் பயணம் பற்றியும், நீர்நிலைகளை பாதுகாக்க மன்னார்குடியில் மன்னையின் மைந்தர்கள் செய்து வரும் திட்டங்கள் பற்றியும் விவாதித்தார்கள்.

இவர்களின் பயணத்தை பற்றி மேலும் தகவல் பெற தோழர் பாரதி கண்ணன் அவர்களின் இந்த  https://www.facebook.com/crbharathikannan முகநூல் முகவரியில் பின்தொடருங்கள்.

அதன் புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு கீழே பதிந்துள்ளோம் ….