Monthly Archives: February 2016

‎தோழர் கு. முத்துகுமார்‬ ஏழாம் ஆண்டு நினைவு நாள்

‪29-01-2015 அன்று ‎தோழர் கு. முத்துகுமார்‬ ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
நமது அமைப்பின் சார்பாக மன்னார்குடி அருகில் குடிதாங்கிசேரியில் உள்ள மனோலயம் மனநல காப்பகத்தில் உள்ள 20 சகோதரர்களுக்கு நமது அமைப்பின் தலைமை ஆலோசகர் மருத்துவர் ஐயா பாரதிசெல்வன் இலரா அவர்களால் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருந்துகளும் வழங்கினோம்.

மருத்துவ முகாமில் ‪#அவினேஷ்‬ என்ற 17 வயது சிறுவனுக்கு இருதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அச்சிறுவனுக்கு நாளைக்கு ஐயாவின் மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிக்கவுள்ளார். அங்கு உள்ள 20 சகோதரர்களுக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டு 45 பாய் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு முன்மொழிந்த விக்னேஷ் மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து மன்னையின் மைந்தர்கள் உறுப்பினர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.