Monthly Archives: July 2016

மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தின் அருகில் கைப்பந்து விளையாட்டு

மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தின் அருகில் நீண்ட காலமாக இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றி அதனை சமநிலைப்படுத்தி  கொடுத்ததன் பயன் இன்று மாலை நேரங்களில் அங்கு உள்ள இளைஞர்கள் கை பந்து விளையாட்டு விளையாடி மகிழ்கிறார்கள்.

இது மன்னையின் மைந்தர்கள் குழுவிற்கான மற்றுமொரு வெற்றி என சிங்கப்பூரில் இருக்கும் நமது குழு உறுப்பினர் திரு.செல்வபூபதி அவர்கள் கூறினார்.

பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும், நல் உள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகள்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு (புகைப்பட உதவி திரு.ஜீவானந்தம் அவர்கள்)

volley-ball-game-mannargudi-railway-station-01 volley-ball-game-mannargudi-railway-station-02

ஜீ ஆர் தோப்பு பகுதியில் சீமை கருவேல மரம் அகற்ற சிறப்பு நிதி கொடுத்தவர்கள்

களப்பணியில் ஈடுபட்ட, நிதி உதவி, கருத்து வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை உரித்தாக்குகிறோம்.

மன்னையின் மைந்தர்கள் குழுவின் ஜி.ஆர். தோப்பு பகுதியின் முதற்கட்ட பணியான சீமை கருவேல மரம் அகற்ற சிறப்பு நிதி கொடுத்தவர்கள் பட்டியல்.

 பிரசன்னா  ரூ. 400
 ஜீவா  ரூ. 1000
 விக்னேசு  ரூ. 2000
 மனோ ரூ. 5000
 செந்தில் ரூ. 5000
 சுரேஷ் ரூ. 2000
 ஓம்பிரகாஷ் ரூ. 500
 ராசசேகரன் & விஜீ ரூ. 5000
 செல்வபூபதி ரூ. 10000
 உத்திராபதி ரூ. 1000
 அருண்ரவி ரூ. 1000
 குரு ரூ. 500
 ராஜேஷ் ரூ. 500
 ரஞ்சித் ரூ. 500
 முத்து முருகன் ரூ. 5000
 செந்தில் ரூ. 1000
 கரன் கார்த்தி ரூ. 1000
 ராஜ்குமார் ரூ. 1000
 ரமேசு ரூ. 1000
 அப்பு ரூ. 1000
 பாலாஜி ரூ. 500
 பிரபாகரன் ரூ. 1000
 ரஞ்சித் ரூ. 5000
 வினோத்குமார் ரூ. 1000
 சிவா ரூ. 5000
 மொத்தம் ரூ. 56900/-

ஜி. ஆர். தோப்பு சீமை கருவேல மரம் அழிப்பு செய்தி – நாளிதழில் நாம்

மன்னார்குடி அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி பின்புறம் உள்ள ஜி.ஆர். தோப்பு (கோபிரளயம் நீர்த்தேக்க பகுதி) சீமை கருவேல மரங்கள் அழிப்பில் ஈடுபட்ட மன்னையின் மைந்தர்கள் குழுவின் செயலை, நோக்கத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வண்ணம் தினமணி மற்றும் தி கிந்து தமிழ் நாளிதழ்கள் செய்தியை வெளியிட்டு உள்ளது.

g-r-thoppu-mannargudi-malai-murasu-newspaper

மன்னார்குடி மன்னார்குடி

ஜி. ஆர். தோப்பு சீமை கருவேல மரங்கள் அழிப்பு

G R Thoppu, மன்னார்குடி

40 ஆண்டுகளுக்கு முன் மன்னார்குடி பகுதிக்கு நீர் வழங்கும் இடமாக இருந்ததுதான் இந்த ஜி. ஆர். தோப்பு – கோபிரளயம் நீர்த்தேக்க பகுதி (மன்னார்குடி அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி பின்புறம்) நாளடைவில் அரசின் பராமரிப்பு இன்றி சில வாரங்களுக்கு முன் வரை சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புடன் காணப்பட்டது.

மன்னையின் மைந்தர்கள் குழு முதற்கட்ட பணியாக அங்கு இருந்த கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை முன்வைத்து செலவு, மற்றும் களப்பணியை முன் நிறுத்தினர்.

மன்னையின் மைந்தர்களின் தொடர் முயற்சியால் கடந்தால் 8 நாட்களாக சீமை கருவேல மரங்கள் அங்கு இருந்து அகற்றப்பட்டது. இதற்கு களப்பணியிலும், பணமாகவும், கருத்தளவிலும் உதவிய மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ.