நம்மாழ்வார் ஏரியின் கரைகளில் பரவியுள்ள பார்த்தீனியம் செடிகளையும், சீமைகருவேல செடிகளை அகற்றும் பணி

ஞாயிற்றுக்கிழமை (12-03-2017) அன்று விடுமுறை நாள் என்றும் பாராமல் நமது மன்னையின் மைந்தர்கள் அமைப்பால் தூர்வாரி சீரமைக்கபட்ட நம்மாழ்வார் ஏரியின் கரைகளில் பரவியுள்ள  பார்த்தீனியம் செடிகளையும், சீமைகருவேல செடிகளை அகற்றும் பணியில் நமது அமைப்பின் தோழர்கள் ஈடுபட்டனர்.

மேலும் கரையில் வைத்துள்ள மரச் செடிகளுக்குக் சொட்டு நீர் முறையில் தண்ணீர் ஊற்ற தண்ணீர் பொத்தல்களை அரை அடி ஆழத்தில் வேர் அருகே பதிக்கும் பணியையும் செய்தனர், இனி தொடர்ந்து மன்னார்குடியில் உள்ள அனைவரும் காலை மாலை யில் நடைபயிற்சி மேற்கொள்ள நம்மாழ்வார் ஏரி கரையை பயன்படுத்துவது என்றும் முடிவெடுத்துள்ளோம்.

களப்பணியில் ஈடுபட்ட தோழர்களுக்கு மதிய உணவை கார்த்தி (Lakshmi Furniture) உபயமாக வழங்கி சிறப்பித்தார்.

களப்பணியில் ஈடுபட்ட தோழர்கள் அஜித், பாலாஜி, ராம், ரஞ்சித், வினோத், செந்தில்குமரன், ஆகாஷ், ராஜகுரு, ராஜேஷ், ராஜகோபால், கார்த்தி, ஜவகர், விக்னேசு, தமிழ்மணி மற்றும் ஓம் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்.

களப்பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு இதோ ….

One thought on “நம்மாழ்வார் ஏரியின் கரைகளில் பரவியுள்ள பார்த்தீனியம் செடிகளையும், சீமைகருவேல செடிகளை அகற்றும் பணி

  1. Narayanasamy. B.A., H.D.C., Deputy Registrar (Rrtired) 45. Kamtchiammankoilstreet Mannargudi

    அருமை. .தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள். .

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>