Tag Archives: சிவன் கோயில்

சோழேஸ்வரர் கோயில் தூய்மைப்படுத்தும் பணி

இடம்: மன்னார்குடி
நாள்: 16 பிப்ரவரி 2020

மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில் களப்பணியாக பட்டக்காரத்தெருவில் உள்ள சோழேஸ்வரர் கோயில் (சிவன் கோயில்) உள்ளே இருந்த தேவையில்லாத செடிகொடிகளை அகற்றியும், புயலின் பொழுது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியும் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பணிகள் நிறைவு பெற்றது.

இத்துடன் கோயிலை சுற்றி சிறு சிறு மரக்கன்றுகளும் நட்டுவைத்து இவ்வார கலந்தாய்வையும் மன்னையின் மைந்தர்கள் அங்கே ஒருங்கிணைத்தார்கள். அதில் தற்சார்பு பொருளாதாரம் பற்றிய விவாதம் கருப்பொருளாக கொண்டு பலரும் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தார்கள்.

களப்பணியில் கலந்து கொண்டவர்கள்:
நிரஞ்சன், வசந்தன், பாலாஜி, யோகேஷ்வரன், ஜெயபிரகாஷ், ரஞ்சித், ராம்,
அருண்பதி, ராசசேகர், ஓம், ராசசபரி, கார்த்தி, நந்தகுமார், ஜவகர், G.T. மகேஷ், அஷ்வத், மணிகண்டன், 3 சிறுவர்கள், மற்றும் தெருவாசிகள்