கூகிள் மொழி பெயர்ப்பில் எப்படி பங்கு கொள்வது ?

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் எப்படி நம் தாய் மொழியான தமிழ் மொழியை இணையத்தில் சிறப்பாக மொழி பெயர்க்க உதவி செய்ய முடியும் என்று எண்ணி மன்னையின் மைந்தர்கள் அமைப்பு ஒரு சிறு முயற்சியாக ஒரு ஆவணத்தை உருவாக்கி உள்ளது. அதை உங்கள் பார்வைக்கு இங்கு பதிகிறோம்.

இங்கே சொடுக்கி தரயிறக்கம் செய்யவும் – இனி இதனை எப்படி கையாளுவது என்று பார்ப்போம். இதனை கைபேசி மூலமும் கையாளலாம்.

கூகிள் மொழி பெயர்ப்பு பங்களிப்பு

  1. தமிழில் இருந்து ஆங்கிலம்
  2. ஆங்கிலத்தில் இருந்து தமிழ்

என இரு முறையில் நாம் இதற்கு பங்கு அளிக்கலாம்.

நாம் ஏன் இதில் பங்கு கொள்ள வேண்டும்?

  • தமிழ் தட்டச்சு எளிதில் செய்ய.
  • சிறப்பான மொழி பெயர்ப்பு செய்ய, அதே நேரத்தில் தவறான மொழி பெயர்ப்பில் இருந்து விடுபட.
  • வார்த்தைகள் முதல் வாக்கியம் வரை மொழி பெயர்ப்பு செய்யலாம்.
  • தமிழை இணையத்தில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல.
  • அதிக பயனாளர்கள் தமிழை பயன்படுத்த உந்துகோலாக நம் குழு இருக்க.
  • தமிழ் மொழியை பாதுகாப்பதில், மற்றும் வளர்ப்பதில் பங்களித்தல்.
  • அதிகமாக யாரிடம் இருந்து ஒரே மாதிரியான பதில் வருகிறதோ அதையே இணையம் பிரதிபலிக்கும்.

இணைய முகவரி :            https://translate.google.com/
கைபேசிக்கான முகவரி: https://translate.google.com/m/translate

தமிழ் அல்லது ஆங்கிலம் அகராதிகள் வைத்து இருப்பவர்கள் விரைவாகவும், அதிகமாகவும் இதில் பங்கு கொள்ளலாம்.

ஒவ்வொரு துளியும் விதையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>