Tag Archives: sagayam

கருத்தரங்கத்திற்கு அன்புடன் அழைக்கிறோம்

2016-election-sagayam-ias-mannargudi-07எளியவர்கள் செய்ய நினைக்கும் எந்த ஒரு செயலும் அவ்வளவு எளிதில் நடப்பது இல்லை.

மக்களை மடையர்கள் ஆக்கி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், மக்களுக்கு விழிப்புணர்வே சிறந்த மருந்து என புரிந்து ஒரு பெரும் பணியை இம்முறை கையில் எடுத்துள்ளனர் மன்னையின் மைந்தர்கள் குழு.

நாளை (30-04-2016)  மன்னை வாழ் மக்களுக்காக நடத்தப்படும் மாபெரும் தேர்தல் கருத்தரங்கம் என்பதால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இரவு, பகல் என பாராமல் உழைத்து வருகிறார்கள்.

ஒவ்வொவொரு தெரு, கிராமம் என அழைப்பிதழ்கள், பிரச்சார தகவல்களை மன்னை மற்றும் அதன் சுற்று பகுதியில் வாழும் அனைவருக்கும் நேரில் சென்று கொடுத்து வந்தனர்.

இரவு நேரத்தில் சுமார் 200 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன மன்னார்குடியின் பெரும் பகுதியில் செய்து உள்ளனர். முகநூலிலும்  தொடர்ச்சியான விளம்பர பணிகள் செய்து வருகிறார்கள்.

மன்னையின் மைந்தர்கள் குழு எவ்வளவு விளம்பரங்கள் செய்தாலும், அவர்கள் எதிர்பார்ப்பது தங்களின் மேலான வருகையே அப்பொழுதுதான் கருத்தரங்கம் முழுமை அடையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கள பணியாற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்….

கள பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு இங்கே பதிந்துள்ளோம்.

மன்னை வாழ் மக்களுக்காக நடத்தப்படும் மாபெரும் தேர்தல் கருத்தரங்கம்

sagayam-ias-visit-mannargudi-election-2016-1அனைவரும் தேர்தல் பற்றி யோசிக்கும் பொழுது நம் மன்னையின் மைந்தர்கள் குழு தேர்தலுக்கு பிறகு மன்னார்குடி சட்டமன்ற தொகுதி மக்களின் வாழ்வு நிலை எப்படி மேம்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் பல்வேறு நபர்களிடம் கருத்து கேட்டு ஒரு மாபெரும் கருத்தரங்கை நடத்த உள்ளது. இதற்கு தங்களின் வருகையை மட்டுமின்றி தங்கள் நண்பர்கள், குடும்பத்தார்கள் என அனைவரின் வருகையையும் எதிர்நோக்குகிறோம்.

மன்னையின் மைந்தர்கள் – மன்னை வாழ் மக்களுக்காக நடத்தப்படும் மாபெரும் தேர்தல் கருத்தரங்கம் (அனுமதி இலவசம்)

நாள்: ஏப்ரல் 30 (30-04-2016)
நேரம்: மாலை 5 மணிக்கு
தலைப்பு: நமது வாக்கு! நமது உரிமை!!
இடம்: மருதுபாண்டியர் திருமண மண்டபம், காந்தி சாலை, மன்னார்குடி.

வரவேற்புரை:
ராம்.சி (ஒருங்கிணைப்பாளர்)

தலைமையுரை:
ஜீவானந்தம். தி (தலைவர்)

மன்னார்குடி வாக்காளர்களின் கோரிக்கை வாசிப்பு:
அருண் ரவி (செயற்குழு உறுப்பினர்)

கருத்தரங்க நோக்க உரை:
மருத்துவர் இலரா. பாரதிசெல்வன் (தலைமை ஆலோசகர்)

சிறப்புரை:
உயர்திரு: சகாயம் (இந்திய ஆட்சி பணியாளர்)
துணைத் தலைவர் அறிவியல் நகரம் சென்னை, தரமணி)

நன்றியுரை:
விக்னேசு. ரெ (ஒருங்கிணைப்பாளர்)

மற்றும் தங்களின் வருகையை எதிர்நோக்கும் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்கள்