Tag Archives: மன்னை

மன்னார்குடியில் நடந்த ஏறுதழுவல் மீட்பு பேரணி

நான்காவது தூணான பெரும்பாலாக முன்னணி ஊடகங்கள் ஊனமான நிலையில் உள்ளதால், சமூக ஊடகங்கள் நான்காவது தூணாக உருவெடுத்தது மகிழ்ச்சியாகவே உள்ளது.

அந்த சமூக ஊடகத்தின் வழியாக பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒடுக்குபவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பது தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று (11-01-2017) மாலை 4.00 மணி அளவில் மன்னார்குடி தேரடி திடலில் இருந்து நகராட்சி வரை தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், நாட்டு மாடு வளர்ப்பு, இயற்கை விவசாயம், ஏறுதழுவல் இவை அனைத்தையும் மீட்டெடுக்கும் வகையில் மண்ணை காக்கும் மன்னார்குடி வட்டார நண்பர்களால் ஒன்றிணைக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் நம் அமைப்பினர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் பேரணிக்கு வருகை தந்த அனைத்து பொது மக்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

நிலத்தடி நீர் அதிகரிக்க வேண்டி செய்த பணி – நம்மாழ்வார் ஏரி

ஒவ்வொரு பணியாக முடித்து, பல கருத்துக்கள், அறிவுரைகளை கருத்தில் கொண்டு மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியில் நிலத்தடி நீரின் மட்டத்தை அதிகரிக்கும் வண்ணம் களப்பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு முடித்துள்ளார்கள்.

நிதியுதவி வழங்கிய மற்றும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் மன்னையின் மைந்தர்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.

நம் களப்பணியாளர்கள் செயலை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இதோ …..

மேலும் இசையமைப்பாளர் வசந்த் அவர்கள் தன் பிள்ளையின் பிறந்த நாளையொட்டி அங்கு மரக்கன்றுகளை நட்டுவைத்ததும் இல்லாமல் அதற்கான கூண்டையும் அமைத்து கொடுத்தார்.

நம்மாழ்வார் ஏரி குழாய் பதிக்கும் பணி

ஐந்தாம் கட்ட பணியாக திட்டமிட்டு திரட்டிய நிதியை கொண்டு கடந்த வாரத்தில் குழாய் பதிக்கும் பணி ஆரம்பித்தாலும், இடையிடையே மழையின் குறுக்கீடும் இருந்தது, ஆனாலும் இடைவிடாது இரவு பகல் என பாராமல் களப்பணியாளர்கள் நம்மாழ்வார் ஏரியில் குழாய் பதிக்கும் பணியை வெற்றிகரமாக செய்து காட்டினர்.

இதன் மூலம் அருகில் உள்ள சியான் குளத்திற்கு, நம்மாழ்வார் ஏரிக்கும்  இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. நிதி உதவி வழங்கிய உறுப்பினர்கள் மற்றும் வெளியில் இருந்து உதவி நல்லுள்ளங்கள், களப்பணியாளர்களுக்கு மன்னையின் மைந்தர்கள் குழுவின் சார்பில் நன்றி உரித்தாக்குகிறோம்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு கீழே பார்வைக்கவும்.

நம்மாழ்வார் ஏரி பணியின் காணொளி

நமது மன்னையின் மைந்தர்கள் அமைப்பால் கட்டமைக்கப்படுகின்ற நம்மாழ்வார் ஏரியின் (சீயார் தோப்பு நீர்த்தேக்கம்) தொடக்கம் முதல் இன்று வரை  செயற்பாடுகளும் நமது அமைப்பின் நோக்கமும் எதிர்கால முன்னெடுப்புகளின் காணொளி தொகுப்பு.

களப்பணி, நிதி உதவி, கருத்து பங்களிப்பு என அனைத்திலும் துணை நின்ற மன்னையின் மைந்தர்கள் உறுப்பினர்கள், வெளியில் இருந்து சிறப்பு நிதியில் பங்கு கொண்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

காணொளி எடுத்து, மற்றும் பலரை சென்று அடையும் வகையில் ஒளிபரப்பிய ஜனனி தொலைக்காட்சி (மன்னார்குடி) நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.

பூமியை காப்போம் கருத்தரங்க ஏற்பாடுகள்

மன்னையின் மைந்தர்கள் உறுப்பினர்கள், மன்னார்குடி பேருந்து நிலையம், உழவர் சந்தை, கடை தெரு என அனைத்து இடங்களிலும் நேரம் பாராது உழைத்து கொண்டிருந்த வேளையில் மேலும் வலு சேர்க்கும் வண்ணம் யாரும் எதிர்பாராத வகையில் மூர்த்தி அண்ணன் அவர்கள் சிங்கப்பூரில் இருந்து இந்நிகழ்ச்சிக்காக நேரில் வந்து கருத்தரங்கம் முடியும் வரை அனைவருடன் இணைந்து பணியாற்றி சென்றது எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சி ஏற்பட்டிற்காக நம் உறுப்பினர்கள் அயராது செயல்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு….